Loading...
எமக்கு அஞ்சியே அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று வடக்கில் நடக்கும் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. வடக்கில் மிகவும் மோசமான வகையில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆகவே தேசிய பாதுகாப்பு இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தொடருமாயின் குறுகிய காலத்தில் மீண்டும் நாட்டின் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Loading...
நொச்சியாகம பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தக் கருத்தை முன்வைத்தார்.
Loading...