வைத்திய துறையில் 68 வருடங்கள் சேவையாற்றியுள்ள, 90 வயதை நெருங்கும் மூதாட்டியின் கையால் இதுவரை 10,000 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்ட சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள, ரியாஸன் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் 68 வருடங்களாக, 89 வயதான யலே லிலிக்கினலனி உசுகினா எனும் மூதாட்டி சத்திர சிகிச்சைகளை செய்து வருகிறார்.
இதுவரை சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள இவர், எதிர் வரும் மே மாதத்துடன் தனது 90ஆவது வயதை பூர்த்தி செய்யவுள்ளார்.
மேலும் தள்ளாத வயதிலும் சத்திர சிகிச்சை அறைக்கு செல்லும் இவர் சுறுசுறுப்புடன் இயங்குவதோடு ஒரு நாளைக்கு 4 சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதாக, ரியாஸன் வைத்தியசாலை தகவல் பகிர்ந்துள்ளது.
அத்தோடு 4 அடி உயரமான உசுகினா, தனக்கு தொழில் சத்திர சிகிச்சை செய்வதெனவும், தனக்கு பிறகு தனது பணிக்காக யாரும் இல்லை அதனால் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வழமையாக இவர் மூலம் சத்திர சிகிச்சை செய்துகொள்ள வருபவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதாகவும், உசுகினாவின் கை அவர்கள் மேல் பட்டதும், குறித்த பயம் அவர்களைவிட்டு போய்விடுவதாக குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.