மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய திர்ப்பிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டக் கற்கை நெறி சட்ட ரீதியானது என அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சுகாதார அமைச்சர் வாக்கு மூலமொன்றை அளித்திருந்தால் இந்த தீர்ப்பு மாறியிருக்க வாய்ப்பு உண்டு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயத்தில் சுகாதார அமைச்சர் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற் காரணமாகவே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டக் கற்கை நெறியை மேன்முறையீட்டு நீதிமன்றம் அங்கீகரித்தது என அவர் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.