Loading...
இலங்கையில் கோவிட் வைரஸ் பரவ ஆரம்பித்த 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முகக் கவசங்களை வழங்குவதற்காக கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் மருத்துவர் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட நான்கு லட்சம் ரூபாயை மோசடி செய்த 20 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை தவிர முதியவர் ஒருவரையும் கொழும்பு மத்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட மருத்துவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
Loading...
இந்த முறைப்பாட்டுக்கு அமைய யுவதியும் 80 வயதான நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Loading...