இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா புதிய ஐபிஎல் அணியால் வாங்கப்பட்டுள்ளதால், அது குறித்த மிகப் பெரிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்றும் வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு 10 அணிகளுடன் களமிறங்கவுள்ளது. புதிதாக லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் வரவுள்ளன.
இந்த அணிகள் 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. இதற்கான கடைசி நாள் நாளை என்பதால், இரு அணிகளும் எடுத்துள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அகமதாபாத் அணி, நாளை ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணி ஹார்திக் பாண்ட்யாவை 15 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.
பாண்ட்யா குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் மக்களை ஈர்க்கும் விதமாக அவர் தான் கேப்டன் என்பதை நாளை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்தணி ரஷித் கான் மற்றும் சுப்மன் கில் இருவரையும் எடுத்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.