அவுஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள 8-வது டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.
இந்த போட்டிகள் அக்டோபர் 16ம் திகதி முதல் நவம்பர் 13 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
ஏற்கனவே எட்டு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு இடங்களுக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளது.
சூப்பர் -12(குரூப்-1)
சூப்பர்-12 சுற்றில் 12 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தான்,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியும், பி பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.
சூப்பர்-12(குரூப்-2)
குரூப்-2 பிரிவில் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, அணிகளோடு பி பிரிவி்ல் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.
குரூப்-2 பிரிவி்ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்திலேயே மோதவுள்ளன.
அக்டோபர் 23-ம் திகதி மெல்போர்னில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2021 டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
2022 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னியில் நவம்பர் 9-ம் திகதியும், 2-வது அரையிறுதி அடிலெய்டிவ் 10-ம் திகதியும் நடக்கிறது, இறுதிப் போட்டி நவம்பர் 13-ம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.