மீரிகம ஹாபிடிகம் கல்வியியல் கல்லூரியில் கடந்த வாரத்தில் சுமார் 50 மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கல்வியியல் கல்லூரி வட்டாரங்கள் இன்று (21) மாலை தெரிவித்துள்ளன.
விஞ்ஞான பீடத்தில் பாடநெறிகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இரண்டு ஆசிரிய மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 38 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது, இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அம்பாறையைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய மாணவர்களுக்கு இந்நோய் தாக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை ஏனையவர்களுக்கு இந்நோய் கண்டறியப்படவில்லை.
ஏறக்குறைய 100 ஆசிரிய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சீதுவை இடை-சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞான பீட வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்கடமி முழுவதும் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மீரிகம பொதுச் சுகாதார பரிசோதகர் நிஷாந்த சோமரத்ன தெரிவிக்கையில் ,தொற்றுக்குள்ளான ஆசிரிய மாணவர்கள் இடை-சிகிச்சை நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர்களது கூட்டாளிகள் தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என்றும் அவர் கூறினார்.