கடுமையான சளி, வறட்டு இருமல் போன்ற நோய்களை குணப்படுத்த இயற்கையான துளசியை பயன்படுத்தாலாம்.
துளசியை செடியில் இருந்து பறித்து அலசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அப்படி துளசி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும். அதுபோல காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல் போன்றவை குணமாகும்.
துளசி இலைச்சாறு ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். அதுமட்டும் இல்லாமல் தேவையில்லாமல் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.
பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.