அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் 2020 தேர்தலுக்காக 7 மில்லியன் டொலர் நிதியை இப்போதே ஒதுக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பெரும் செல்வந்தரான டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே தமது அதிரடி நடவடிக்கைகளால் உலக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை நாள்தோறும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க குடுமக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிமக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் அதிரடி நடவடிக்கைகளால் கதிகலங்கிய மக்கள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிந்துவிடும், அதுவரை பொறுமை கொள்வோம் என தங்களை தாங்களே தேற்றி வந்தனர்.
ஆனால் ஜனாதிபதி டிரம்ப், தாம் தேர்தலில் வெற்றி பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை சத்தமின்றி செய்து முடித்துள்ளார். அதாவது 2020 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களுக்காக தமது பிரச்சார நிதியில் இருந்து 7.6 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.114,37,24,000) தொகையை இப்போதே ஒதுக்கியுள்ளார் ஜனாதிபதி டிரம்ப்.
தேர்தலுக்கு பின்னரும் டிரம்பின் பிரச்சார குழுவானது பெருமளவு தேர்தல் நிதியை திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பணிகளையும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்காக டிரம்பின் பிரச்சார குழுவானது 9.6 மில்லியன் டொலர் வரை செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் 7.5 லட்சம் டொலர் வரை சட்டத்துக்கு புறம்பாக திரட்டிய நிதி எனவும் கூறப்படுகிறது.