கற்றுத் தேர்ந்தவர்களுக்கு அவமரியாதை இழைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“நான் அரசியல் கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். அரசியலிலிருந்து விலகவில்லை. பகல் நேரங்களில் நான் நீதிமன்றில் வழக்குகளில் முன்னிலையாகின்றேன்.
அமைச்சுப் பதவியொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. தற்போதைய நாடாளுமன்றில் நல்ல அறிவுடைய, கல்வித் தகமையுடைய, நல்ல அனுபவமுடைய நபர்களின் அறிவு, அனுபவம் என்பன இழிவுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை அவ்வாறு அழைப்புக்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.