ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் எந்தவித சந்தேகமும் இன்றி எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை ஆட்சியிலிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“பிரதேசங்களை தெரிந்தெடுத்து விரைவாக அபிவிருத்தி செய்ததன் ஊடாகவே சீனா அபிவிருத்தியடைந்தது. ஒட்டுமொத்த தீவுகளையும் ஒரே கனத்தில் அபிவிருத்தி செய்ததன் ஊடாக சிங்கப்பூர் அபிவிருத்தியைக் கண்டது.
பல்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்ததனால் மலேசியா அபிவிருத்தியடைந்தது. பல பகுதிகளை ஒரே தடவையில் 10 ஆயிரம் ஏக்கரை முதலீட்டு வலயமாக மாற்றியதனால் தாய்லாந்து அபிவிருத்தியடைந்தது. நாங்களும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
வெளிநாட்டவர்களின் அறிவு, எமது இடம். இரணவில பகுதியிலுள்ள அமெரிக்கக் குரல் மத்திய நிலையத்தின் காலம் முடிவடைவதனால் திருப்பி அந்தக் காணியை வழங்க முன்வருகின்றனர். அந்த 500 ஏக்கர் காணியில் பாரிய சுற்றுலா வர்த்தகத்தை ஏற்படுத்தவுள்ளோம். இந்த சவாலை நாங்கள் ஏற்க மறுத்தால் எமது நாட்டிற்கும், நம்நாட்டு இளைஞர்களுக்கும் எதிர்காலமொன்று இல்லாமல் போய்விடும். இரண்டு பிரதான கட்சிகள் இருந்தால் போட்டியும் இருக்கத்தான் வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் இந்த இணைந்த அரசாங்கம் 2020ஆம் ஆண்டவரை நீடிக்கும்” – என்றார்.