நடிகர் ஜெயம்ரவியும், அரவிந்த்சாமியும் ஒன்றாக இணைந்து நடித்தப் படம் தனி ஒருவன்.
இந்த படம் இருவருக்கும் நல்ல பெயர்களை பெற்று தந்தது.
இந்நிலையில், தற்போது போகன் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது இன்று காலை திரையறங்குகளில் வெளியானது.
ஆனால், இதற்கிடையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தமிழ் சினிமாவின் மொத்த நடிகர்களின் முகத்திரையும் கிழிந்து விட்டது.
அதன் விளைவு தான் இன்று நிகழ்ந்துள்ளது. ஆம், இன்று வெளியான போகன் படத்திற்கு சென்னையில் உள்ள எந்த தியேட்டரிலும் முன் பதிவில் ஹவுஸ் புல் ஆகவில்லை என்பது தான் ரவிக்கு கிடைத்த பேரதிர்ச்சி.
ஜெயம் ரவி. ரசிகர் மன்றத்தை கூப்பிட்டு இப்பவே புக் பண்ணி மானத்தை காப்பாத்துங்கப்பா என்று பணிகளை முடுக்கி விட்டு இருக்கார்.
ஆனால், ரசிகர் மன்றத்திலும், யாரும் அவர் பேச்சை கேட்க கூட இல்லையாம்…
இந்நிலையில், சமூக வலைதளத்தில், இப்பொழுது, ஜெயம் ரவிக்கு, அடுத்து பீட்டா ரஜினி, பீட்டா தனுஷ், பீட்டா விஷால் இவர்கள் படத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறது இளைஞர் பட்டாளம். ஆப்பு ரெடி. மாணவர்கள் கவுண்டன் ஸ்டார்ட் என சமூக வலைதளத்தில் பதிவுகளை மேற்கொள்கின்றனர் இளைஞர்கள்.