கர்ப்பமான காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தினந்தோறும் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். கட்டிட வேலைக்கு செல்லும் போது அங்குள்ள கொத்தனாரான மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக நந்தினி கர்ப்பமாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனிடம், நந்தினி வலியுறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் சற்று உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் இவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதல் 29 ஆம் திகதி மணிகண்டன் நந்தினியை கடத்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து 4 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் நந்தினியின் பெண்ணுறுப்பை பிளேடால் வெட்டி கர்ப்பப்பையில் இருந்து சிசுவை எடுத்து வீசி நந்தினியையும் கொடூரமாக வெட்டியே கொன்றுள்ளார்.
இதனையடுத்து நந்தினியின் பெற்றோர் அவரை காணவில்லை என புகார் அளித்தும் போலீசார் மணிகண்டனை கைது செய்யவில்லை.
இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னர் தான் மணிகண்டனையும் அவனது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.