Loading...
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு சையத் மோடி கோப்பையை வென்றதன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் இறங்கி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Loading...
ஆண்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம் 18-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 21-வது இடத்திலும், பிரனாய் 24-வது இடத்திலும், சமீர் வர்மா 25-வது இடத்திலும் உள்ளனர்.
Loading...