திருச்சி, செந்துறை அருகே உள்ள நந்தினி என்ற பெண் காதலனால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த தலித் சமூகத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
இவர் வாழ்க்கையை நடத்த கட்டிட வேலைக்கு சென்ற போது அங்கு மணிகண்டன் என்ற கொத்தனாருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
காதல் மோகத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் நந்தினி கர்ப்பமடைந்துள்ளார்.
இதனால் காதலர் மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் இந்து முன்னணி ஒன்றிய செயலாளராக இருந்த மணிகண்டன் இதற்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் திகதி மணிகண்டன் நந்தினியை கடத்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து 4 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் நந்தினியின் பெண்ணுறுப்பை பிளேடால் வெட்டி கர்ப்பப்பையில் இருந்து சிசுவை எடுத்து வீசி நந்தினியையும் கொடூரமாக பிளேடால் வெட்டியே கொன்றுள்ளார்.
இதனையடுத்து நந்தினியின் பெற்றோர் அவரை காணவில்லை என புகார் அளித்தும் போலீசார் மணிகண்டனை கைது செய்யவில்லை.
இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னர் தான் மணிகண்டனையும் அவனது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.