ஆக்டர் பிரபுதேவாவும் , அவரது நண்பர் டாக்டர் ஐசரி கே.கணேஷும் இணைந்து , பிரபுதேவா ஸ்டுடியோஸ் வழங்க, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் வெளியிட ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க,”ரோமியோ ஜூலியட் ” பட இயக்குனர் லஷ்மன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சித்து விளையாட்டு ஜெகஜாலக் கில்லாடி படம் தான் “போகன் ” .
போலீஸுக்கும் , போக சித்தரின் சித்து விளையாட்டு படித்து கொலை, கொள்ளை செய்பவனுக்குமிடையில் கூடு விட்டு கூடு பாய்ந்து நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் இறுதியில் வெல்வது யாரு ? என்னும்
கருவுடன் வந்திருக்கும் “போகன் “படத்தின் கதைப்படி, பெரும் கொள்ளையர் அர்விந்த்சாமி தன்னிடம் உள்ள போக சித்தரின் வசிய சக்தியால் சென்னையில் உள்ள ஒரு பெரும் நகைக்கடையிலும், ஒரு பிரபல வங்கி கிளையிலும் கைவரிசை காட்டி பல கோடிகள் பணம் கொள்ளையடிக்கிறார்.
அதில் நேரடியாக பாதிப்பிற்குள்ளாகி., போலீஸ் கஸ்டடிக்கு செல்கிறார் .. வங்கி அதிகாரி “ஆடுகளம்” நரேன். அவரை காபந்து செய்து உண்மை குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமையும் , கட்டாயாம்…அவரது மகனும் , விக்ரம் எனும் போலீஸ் அதிகாரியுமாகிய ஜெயம் ரவிக்கு இருக்கிறது.
போக சித்தரின் … அதாங்க அரவிந்தசாமியின் சித்து விளையாட்டுகளை மீறி ., ஆதித்யா – அர்விந்தசாமி சம்பந்தப்பட்ட அந்த கொள்ளை கேஸ்களில் அர்விந்த்சாமி ரூட்டிலேயே உண்மையை கண்டறிந்து அவரைசிறையிலடைத்தாரா ?, அல்லது அர்விந்த்சாமி போலீஸ் – ஜெயம் ரவியின் பொண்டாட்டி ஆகப்போற ஹன்சிகாவையும் அடைந்து தனக்கு எதிரான ஆதாரங்களையும் அழித்து கூட்டி கழித்து ஜெயிக்கிறரா ? இல்லையா …?என்பது தான் போகன் படத்தின் புது மாதரியான கூடு விட்டு கூடு பாய்ந்தால்…. எனும் லாஜிக் மேஜிக்கையும் உள்ளடக்கிய பொல்லாத கதையும் களமும்!
போலீஸ் உதவி கமிஷ்னர் விக்ரமாக ஜெயம் ரவி செம கச்சிதம் . ஜெயம் ரவி அர்விந்த்சாமி உருவிலும் , அர்விந்த்சாமி உருவிலும் பண்ணும் கலாட்டாக்கள்.
ரசனை ஹன்சிகாவுடனான காதல் காட்சிகளில் செம கிளாஸும் , ஆக்ஷன் காட்சிகளில் செமமாஸும் காட்டி மிரட்டியிருக்கிறார் மனிதர்.
வில்லனாகவும் மற்றொரு நாயகராகவும் பழனிசித்தர் போகர் பற்றி அறிந்து அவரது ஓலைச்சுவடி வழிகாட்டுதல்படி ஊரை அடித்து உலையில் போடும் மன்னர் பரம்பரையின் கடைசி வாரிசு ஆதித்யா வாக அர்விந்தசாமி, “நான்லாம் போதையிலதான்டா எராம்ப தெளிவா இருப்பேன்…” என்றபடி , அப்போது ஹீரோவாக காட்டிய ரொமான்ஸைக் காட்டிலும் , தற்போது வில்லன் ‘கம் ‘ஹீரோவாக செம பர் பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்!
அர்விந்த்சாமி , ஜெயம் ரவி ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகிக் கொள்ளும் “பப்”காட்சியில் .,
“ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா….”என அர்விந்த்சாமி நக்கல் அடிப்பதும் , “நீங்க இப்பதான் சிவபானத்துல இருக்கீங்க….” என அர்விந்துக்கு புது போதையை அறிமுகம் செய்யும் காட்சியில் ஜெயம் ரவியும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.
கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி ., பரபரப்பான பக்கா காவல்துறை கதையில் குல்கந்து மாதிரி பக்காவாய் ரசிகனின் நெஞ்சோடு கோந்து போட்டு ஒட்டிக் கொள்ளும் விதத்தில் கலக்கியிருக்கிறார்.
அர்விந்த்சாமி உருவில் இருக்கும் ஜெயம் ரவியை எல்லோரும் ஜெயம் ரவி தான் என நம்பும் போது ஹன்சிகா மட்டும் நம்பாது இருப்பது நம்பும்படியாக இல்லை.
போலீஸ் கமிஷ்னராக பொன்வண்ணன் , பேங்க் மேனேஜர் கம் ஜெயம் ரவியின் அப்பாவாக “ஆடுகளம்” நரேன் ஆர்காலஜிக்கல் ஆராய்சி பேராசிரியராக நாசர் மற்றும் ரவியின் போலீஸ் தோழராக நாகேந்திர பிரசாத் ,அக்ஷரா உள்ளிட்ட ஒவ்வாரு வரும் , தங்கள் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டுள்ளனர்.