Loading...
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.
இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் கெப்லான் பரட் டயா தீவுகளில் இன்று அதிகாலை 12.55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Loading...
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
Loading...