பொதுவாக ஒரு மனிதனுக்கு உணவு என்பது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக முக்கியமான ஒன்று. காலை உணவு சரியாக இருந்தால் மட்டும் தான் அந்த நாள் முழுக்க நாம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
காலையில் உணவை தவிர்ப்பதால் உடலில் பல தீமைகள் ஏற்படும். ஆனால் காலையில் குறிப்பாக வெறும் வயிற்றில் ஒரு சில உணவுகளை சாப்பிடவே கூடாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
தீமைகள்:-
பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புளிப்புச் சுவை கொண்ட பழங்களான சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.
வாழைப்பழத்துடன் பால் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலை உணவாக வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடுபவர்கள் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பார்கள்.
காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உணவுகளில் உள்ள மசாலாப் பொருட்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே எப்போதும் காரமான உணவுகளை காலை உணவின் போது எடுக்காதீர்கள்.
தக்காளியை வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆபத்தானதாக கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் டயட்டில் இருக்கும் போது காலையில் சாலட்டுகள் சாப்பிடுவார்கள். தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.