தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே (Prasad Colombage) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் பொறுப்புடைய தரப்பினரும் உடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், உரிய நடவடிக்கையினை எடக்காத பட்சத்தில் நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுகாதார வழிகாட்டி ஒன்று இருக்கிறதே தவிர, அது அரச மற்றும் தனியார் துறையினரால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
மக்கள் இந்த விடயத்தில் இருக்கின்ற அபாய நிலையைப் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர்.மேலும், மக்களுக்காக சுகாதார அமைச்சு போதிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.