Loading...
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – காளியாவத்தை பகுதியில் இன்று (02) 200 கிராம் கஞ்சாவுடன் 23 மற்றும் 36 வயதுடைய சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு பிரிவினரும் தெல்லிப்பழை பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Loading...
சந்தேக நபர்கள் இருவரும் கஞ்சாவினை சிறு சிறு பொதிகளாக கட்டியும், வேறொரு பையில் உதிரியாகவும் அதனை உடமையில் வைத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...