வயதாகும் போது உடல் சந்திக்கும் மாற்றங்களில் கைகளில் உண்டாகும் சுருக்கமும் ஒன்று. ஆனால் இன்றைய காலத்தில் இளம்வயதிலே கை சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை ஒரு சில எளியமுறையில் மூலம் போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
சர்க்கரை ஸ்க்ரப் இறந்த சரும செல்களை நீக்கி கைகளை மென்மையாகவும் சுருக்கமில்லாமலும் வைக்கிறது. தினமும் அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்து வருவதன் மூலம் கைச்சுருக்கத்தை நீக்கலாம்
மென்மையான கைகளுக்கு தேய்த்து முடித்த பிறகு கைகளை பாலில் 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் மென்மையான கைகளை விரைவில் பார்க்கலாம். நேரமிருந்தால் தினமும் இதை செய்யலாம்.
வாழைப்பழத்தை மசித்து நன்றாக கூழ் போல் மசித்து கைகளில் தடவி எடுக்கவும். அது காய்ந்தவுடன் மந்தமான நீரில் கைகளை கழுவி விடவும். சிறந்த முடிவுகளை பெறுவதற்கு வாரத்தில் இரண்டு முறையாவது செய்ய வேண்டும். இது சரும சுருக்கங்களை எதிர்த்து போராட உதகிறது.
அன்னாசிப்பழத்தை மசித்து சுருக்கமிருக்கும் கைகளில் தடவி கொள்ளவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதனால் சுருக்கமில்லாத மென்மையாக கைகளை நீங்கள் பெறுவீர்கள். ஒவ்வொரு நாளும் இந்த மாஸ்க் பயன்படுத்தலாம். படிப்படியாக சுருக்கம் குறையும் வரை இதை பயன்படுத்துங்கள்.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து கைகளுக்கு மசாஜ் செய்யவும். சுருக்கமிருக்கும் கைகள், விரல்களில் மசாஜ் செய்து கைகளுக்கு பருத்தி கையுறைகள் அணிந்து அவற்றை ஒரே இரவில் விட்டு விட வேண்டும் பிறகு காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை சுத்தம் செய்யுங்கள். இது கைகளை மென்மையாகவும். பொலிவாகவும் மாற்ற கூடும்.
அரிசியை பொடியாக்கி ரோஸ் வாட்டர் மற்றும் பாலுடன் கலக்கவும். கைகளில் மாஸ்க் போட்டு உலர வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.கைகளை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க இந்த அரிசி மாவு மாஸ்க் சிறப்பாக உதவும்.
கைகளில் கற்றாழை ஜெல்லை தடவி குறைந்தது 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து தண்ணீரில் கழுவி எடுத்து கைகளை உலர விடவும். தொடர்ந்து செய்து வந்தால் சுருக்கங்கள் குறைவதை பார்க்கலாம்.
தர்பூசணியின் தோலை மசித்து கைச்சுருக்கங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இயற்கையாகவே சுருக்கங்களை தீர்க்கும் பொருள்களில் இதுவும் ஒன்று.
தேங்காயெண்ணெயை சில விரல்களில் தொட்டு கைகளால் வட்டம் வடிவ இயக்கங்களில் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். தேங்காயெண்ணெயில் கைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சரும சுருக்கத்தை வெளியேற்றுகிறது
கேரட்டை தோல் உரித்து வேகவைத்து மசித்து அதில் தேன் சேர்த்து கலந்து கைகளில் சுருக்கம் இருக்கும் இடங்களில் தடவி எடுக்கவும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.