ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை பிரான்ஸிலும் செயற்படுத்த எண்ணியுள்ளதாக ஸ்டீவ் பிரிவோவ்ஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட உள்ள மெரைய்ன் லி பென்னுக்கு (ben) நெருக்கமானவரான பிரிவோவ்ஸ், பென் வெற்றிப் பெற்றால் இந்த தடையை அமுல்படுத்த தயார் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை ஐரோப்பாவும் பிறப்பிக்க வேண்டிய பொருத்தமான காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ட்ரம்பின் உத்தரவுக்கு புதிய திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆங்கிலம் பேசும் வெள்ளையர்கள் அமெரிக்காவுக்குள் எவ்வித சிரமங்களும் இன்றி செல்ல முடியும்.
குறிப்பாக பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலிய நாட்டவர்களுக்கு அமெரிக்காவின் கதவு திறந்தே உள்ளது. நியூசிலாந்து நாட்டினருக்கு எதிர்காலத்தில் சலுகையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.