இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1059 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 1,27,952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 7.98 சதவீதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,20,80,664 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 2,30,814 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,00,01,228 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,01,114 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,31,648 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 168.98 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.