அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பெண் ஒருவரின் தலைமுடியை கழுவும் காணொளி, சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மெல்பனின் தென் கிழக்கு பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற பிரதமர் , அங்கு தொழில் பயிற்சிக்காக இணைந்திருந்த பெண் ஒருவரின் தலைமுடியை கழுவிய காணொளியே வெளியாகியுள்ளது.
நாட்டின் கட்டுப்பாடுகள் தளர்ந்து இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில், இளையவர்கள் தொழில்களில் இணைந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் இந்த செயலில் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பரதமரின் இந்த செயலை பல தரப்பினரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இது தேர்தலை மையப்படுத்தி, அவர் அரங்கேற்றிய நாடகம் என்று விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில் வெளியிடப்பட்ட தேர்தல் தொடா்பான கருத்துக்கணிப்பின்படி, கடந்த தேர்தலில் மொரிசன் 45க்கு 36 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தபோதும், தற்போதைய நிலையில், தொழில்கட்சியின் தலைவர் என்தனி அல்பான்ஸ், 43க்கு 41 என்ற புள்ளிகளால் பிரதமர் மொரிசனை நெருங்கி வருகிறார் என்று காட்டப்பட்டுள்ளது
எனவே இந்த புள்ளிகளின் இடைவெளியை அதிகரித்துக்கொள்ளும் வகையில் பிரதமரின் செயற்பாடு அமைந்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.