இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இது குறித்து மற்றொரு இந்தி முன்னணி நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்டபோது…
‘‘மேற்கத்திய நாடுகளில் சினிமா நொடிந்து கொண்டிருக்கிறது. ஆசியாவில் தான் சினிமா துறை நல்ல நிலையில் இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் எப்படி இருந்ததோ, அதுபோல தற்போது ஆசியாவில் சினிமா உலகம் நன்றாக இருக்கிறது. இது இந்தி பட உலகுக்கு நல்ல நேரம். எனவே,. நான் ஹாலிவுட்டை பார்த்து ஏமாற மாட்டேன். இந்த நேரத்தில் ஹாலிவுட் செல்ல நான் முட்டாள் அல்ல. என்னைப் போன்று மற்ற நடிகைகள் உண்மையை சொல்ல அஞ்சுகிறார்கள். பின்விளைவுகளை நினைத்து அவர்கள் அப்படி இருக்கிறார்கள். தேவையான சமயங்களில் கூட ஆதரவாக நிற்பது இல்லை.
பிரபலமான நடிகைகள் உண்மை பேசினால் தன்னை எல்லோரும் வெறுப்பார்கள் என்று பயப்படுகிறார்கள். தங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே, அவர்களுக்காக கூட உண்மையை பேசுவது இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார்.