Loading...
திருகோணமலை – கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை 15 முதல் 20 வயது கொண்டதாக இருக்கலாம் எனவும், கால்நடை வைத்தியரின் தலையீட்டில் யானையின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் வனஜீவராசி அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
Loading...
குறித்த யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கித்துல்ஊத்துவ பிரதேசத்தில் யானைகளில் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
Loading...