பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது 13-வது வயது முதல் ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் இந்திய இசைக் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த குரல் இன்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
ஆம், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற பழம்பெரும் பாடகி, இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் இன்று மறைந்து விட்டார்.
லதா மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், லதா மஞ்சேஷ்கரின் மறைந்த செய்தியை கேட்டு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் எங்கள் இதயங்களில் என்றும் வாழ்வீர்கள் என பதிவிட்டுள்ளார்.