முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா காலமானார்.
புற்றுநோய்க்கு எதிராக நீண்ட காலமாக போராடி வந்த திரிலோக்சந்த் ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.
இராணுவ அதிகாரியாகவும், ஆயுதத் தொழிற்சாலையில் வெடிகுண்டு தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவருமான திர்லோக்சந்த், காசியாபாத் இல்லத்தில் மறைந்தார்.
ரெய்னாவின் தந்தையின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ‘ரெய்னாவாரி’ ஆகும்.
1990 களில் காஷ்மீர் பண்டிட்டுகளின் கொலைக்குப் பிறகு அவரது தந்தை கிராமத்தை விட்டு வெளியேறினார்.ரெய்னாவின் குடும்பம் முராத்நகர் நகரில் குடியேறியது.
பின்னர் ரெய்னா 1998ல் லக்னோவில் உள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
காஷ்மீரின் துயரம் பற்றி தனது தந்தையை நினைவுபடுத்தும் எதையும் குறிப்பிடாமல் கவனமாக இருப்பேன் என்று ரெய்னா கூறியுள்ளார்.
தந்தையின் பிரிவால் வாடும் சுரேஷ் ரெய்னாவுக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.