அஜித் தன்னுடைய 57 வ து படமான விவேகம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரை பிரிச்சி போட்டு மேஞ்ச, ஒரு க்ரூப், இந்த விவேகம் போஸ்டர் அஜித் எந்த கட்சியை சேர்ந்தவர்ன்னு சொல்லுது என்று வைரல் பதிவு பண்ணி இருக்காங்க.
“உலகமே அஜித் அ.தி.மு.க-காரர் ன்னு சொன்னாலும், விவேகம் போஸ்டரை பார்த்தா, அவரு தி.மு.க-ன்னுதான் தெரியுதாம். எப்படி?
போஸ்டர்ல அஜித் போட்டு இருக்கிற கிளவ்ஸ் கறுப்பு சிவப்பு கலர்ல இருக்கு.அது தி.மு.க-வோட கோடி கலர்.
அடுத்தாப்ல, அந்த போஸ்டரில் அவர் தலை மேல் ஹெலிகாப்டர் சுத்திக்கிட்டு இருக்கும். ஆனா குனிஞ்சு கும்பிடு போடுகிற அதிமுக காரராக இல்லாம, நிமிர்ந்து நிக்கிற திமுக காரராக இருக்கார்.
கடந்த மூணு படங்களா, அதுவும் சிவாவோட இயக்கத்திலே, அஜித் நடிச்ச ‘வீரம்’ ‘வேதாளம்’ என்று அந்த படங்களில் எல்லாம் அண்ணன்-தம்பிகள்,தங்கச்சி செண்டிமென்ட் தான் கான்செப்ட்.இந்த படத்திலேயும் இதை எதிர்பார்க்கலாம்.
ஆங் இப்ப புரியுதா மக்களே , அஜித் எந்த கட்சின்னு. அவரு திமுகவோட ஸ்லீப்பர் செல்லுன்னு போஸ்டரில் காட்டிட்டாரே.”
முடியலடா…