உடலில் முகப்பகுதி தவிர்த்த தோல் பகுதிகள் அனைத்தும் கல்லை போன்று இறுகியதாகவும், தோல்கள் வெடித்த படைகளாக மாறிவரும் அரிய நோய் தொற்றை, பங்களாதேஷில் உள்ள சிறுவன் எதிர் கொண்டுள்ளார்.
பங்களாதேஷின் நாஹாவொன் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மெஹந்தி ஹஸன் எனும் 8 வயது சிறுவன், மிகவும் அரிதான தோல் நோயிற்கு உட்பட்டுள்ளார். இதனால் அவரது தோல் கரு நிறமானதாக மாறுவதோடு, ஒரு கற்படிக்கையின் தோற்றத்தை போல் மாறி வருகின்றது.
மேலும் சிறுவனின் முகம் தவிர்த்த ஏனைய பகுதிகளிலுள்ள தோல்கள் வெடிப்புற்று, அவரை வேதனைப்படுத்தி வருகின்றது. இதனால் சமூகத்தவர்கள் வெறுப்பதோடு சிறுவனை தூற்றி வருவதாக அவரது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
சிறுவன் பிறந்த 12ஆவது நாள் தொடக்கம் குறித்த நோய் தொற்று காணப்படுவதாகவும், சிறுவனின் தோல்களின் தோற்றத்தால; அவர் பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, அயலவர்கள் சிறுவனை ஒரு அறுவறுக்க தக்க வகையில் பார்ப்பததால் 8 வருடங்கள் சிறுவனை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் குறித்த சிறுவனின் பெற்றோர். இந்நிலையில் சிறுவனின் வைத்திய செலவிற்கு அதிக செலவழிக்க வேண்டியுள்ளதால், குறித்த பெற்றோர் தமது பிள்ளைக்கு வந்துள்ள அரிய நோயிலிருந்து விடுவிக்ககோரி அரசின் உதவியை கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.