பதுளை – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது , வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாதம் கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் பதுளைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் மூன்றாவது சந்தேக நபரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.