திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் 1.68 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தளாய் – சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் வசமாக சிக்கியதாக விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த டேவிட் சுசந்த குமார (38 வயது) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.