குறிப்பாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல கார் விரும்பிகள் விலைமதிப்புமிக்க கார்களையே வாங்குகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஃபோர்டு மஸ்டாங் காரை முதன்முறையாக வாங்கியவர் நடிகர் தனுஷ். ஏற்கனவே அவரிடம் ஆடி 8, ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ள நிலையில் கருப்பு நிற ஃபோர்டு மஸ்டாங்கை ரூ.70 லட்சம் கொடுத்து வாங்கினார்.
அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ஊதா நிறத்தில் ஃபோர்டு மஸ்டாங் காரையே வாங்கியுள்ளார். இந்தியாவில் ஃபோர்டு மஸ்டங்கை வாங்கிய முதல்நபர் பிரபல பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி ஆவார்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கென ஒதுவுக்கப்பட்ட 100 கார்களும் விற்பனையானதால் இந்த வருடம் அதே காரை அனிருத்தும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கார் அதிகபட்சமாக 250 கி.மீ. வேகத்தில் செல்லும்.