தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடைகளை முறியடிப்பீர்கள். தனரவு உண்டு. திருமணப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். நு£தனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம் பூமி சேர்க்கை உண்டு. தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகலாம்.
நிதி நிலை உயரும் நாள். நிகழ் காலத் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களை மேற் கொண்டு மகிழ்வீர்கள். சகோதர வழியில் சந்தோஷம் ஏற்படும். கொடுக்கல்– வாங்கல் ஒழுங்காகும்.
வளர்ச்சி மேலோங்கும் நாள். வீடு கட்டும் பணியில் தீவிரம் காட்டு வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் ஏற்படும். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
மகிழ்ச்சி கூடும் நாள். மறதியால் விட்டுப்போன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அன்றாடப் பணிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்பட்டு அகலும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை ஏற்படலாம்.
பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பணவரவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும் நாள். நண்பர்கள் ஆதர வுக் கரம் நீட்ட முன்வருவர். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும் நாள். வீட்டைச் சீரமைப் பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உள்ளத்தில் ஒன்றும், உதடிட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் ரீதியாக பயணம் ஒன்று உருவாகலாம்.
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை கேட்ட இடத்திலிருந்து வந்து சேரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப் பான சூழ்நிலை உருவாகும்.