எல்லாரையும் போன்ற வாழ்க்கை தான் இந்த தம்பதியும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சாக்கடையில் என்பது தான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நமது உலகில் இரண்டு வகையான மக்கள் இருக்கின்றன. எத்தனை இருந்தாலும் போதவில்லை என்ற மனம் கொண்டவர்கள், இருப்பதை வைத்து நிறைவடையும் மக்கள். இதில் இந்த கொலாம்பியன் தம்பதி இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள். இந்த உலகம் எதை எல்லாம் வசதி என்கிறதோ அதில் துளியும் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்துக் கொண்டிருக்கார்கள் இவர்கள்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரியா கார்சியா, மிகுவல் ரெஸ்ட்ரேபோ!
மரியா கார்சியா மற்றும் அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
மேடெல்ளின்!
கொலம்பியாவின் மேடெல்ளின் எனும் பகுதியில் தான் இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் போதை பழக்கதிற்கு அடிமையாக இருந்தனர்.
போதை பழக்கம்!
மேடெல்ளின் போதை பொருள் விற்பனையின் படுபயங்கரமான பகுதியாகும். மரியா கார்சியா, மிகுவல் ரெஸ்ட்ரேபோவின் வாழ்க்கை இதில் சிக்கி சின்னாபின்னமாகி போனது.
ஆறுதல்!
ஆழ்ந்த துயரத்தில் இருந்த அந்த தருணத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக விளங்கினர். போதை பழக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளிவந்தனர்.
உதவிக்கு யாரும் இல்லை!
போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்த பிறகும், இவர்களுக்கு உதவுவதற்கு என நண்பர்களோ, குடும்பமோ இல்லை. அப்போது தான் சாக்கடையில் வாழ துவங்கினர்.
தொல்லைகள்!
துவக்கத்தில் இவர்களுக்கு நிறைய தொல்லைகள் வந்தனவாம். அனைத்தையும் தாண்டி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர் மரியா கார்சியா, மிகுவல் ரெஸ்ட்ரேபோ.
நிறைந்த வாழ்க்கை!
தொடர்ந்து 22 வருடங்களாக சாக்கடையில் வாழ்ந்து வரும் இவர்கள் இருவருக்கும் இதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
வீடு!
சாக்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின்வசதி, சமையல் அரை, விளக்குகள் அமைத்து இவர்கள் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். மற்றவரை போல இவர்களும் கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கொண்டாடுகின்றனர்.
நாய்!
இந்த தம்பதி பிளாக்கி எனும் நாயை வளர்த்து வருகின்றனர். இது தான் இவர்களுடைய காவலன். இவர்கள் இல்லாத நேரத்தில் வீட்டை காப்பதும் இதுதான்.