Loading...
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் பிரபுதேவா. அந்த வரிசையில் தற்போது புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் முக்கிய கதாபாத்தரத்தில் நடிக்க உள்ளார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 1970-80 காலகட்டத்தில் உள்ள கதையை மையமாக கொண்டு நகைச்சுவையுடன் எடுக்கப்பட உள்ள இப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆர்.ஜே.பாலாஜியும் நடிக்க உள்ளாராம். முன்னதாக தேவி படத்தில் பிரபுதேவா-ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்திருந்தனர்.
Loading...
இப்படத்தை வாசன்ஸ் விஸ்யூவல் வென்சர் தலைப்பில் கே.எஸ்.ஸ்ரீனிவாசன். கே.எஸ்.சிவராமன் தயாரிக்க உள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் `காற்றுவெளியடை’, ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம், சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, ஜுவாவின் `கீ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Loading...