வழக்கமாக உணவு வகைகளின் பெயர்களை ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கு வைக்கும் கூகுள் நிறுவனம் ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மையாக ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களே பயன்பாட்டில் இருக்கின்றன. இதுவரை கூகுள் நிறுவனம் 12 வெர்சன் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களை வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ராய்டின் 12-வது வெர்சனான “ஸ்னோ கோன்” கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ் பிரீவ்வை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ் பதிவு செய்யப்பட்ட, குறிப்பிட்ட டெவலப்பர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓ.எஸ்ஸின் பீட்டா வெர்ஷன் ஏப்ரல் மற்றும் அதற்கு பின் வரும் மாதங்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக உணவு வகைகளின் பெயர்களை ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கு வைக்கும் கூகுள் நிறுவனம், ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது.
ஆண்ட்ராய்டு 13-ன் டெவலப்பர் ப்ரீவ் 1-ஐ பிக்ஸல் 4, பிக்ஸல் 4 எக்ஸ் எல், பிக்ஸல் 4 ஏ, பிக்ஸல் 4 ஏ(5ஜி), பிக்ஸல் 5, பிக்ஸல் 5ஏ 5ஜி, பிக்ஸல் 6 மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ ஆகிய போன்களில் இன்ஸ்டால் செய்யலாம்.
ஆண்ட்ராய்டு 13-ல் செயலிகளை பயன்படுத்த அருகில் உள்ள வைஃபை கருவிகளை இணைக்கும்போது ரன் டைம் அனுமதி கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓ.எஸ்ஸில் உள்ள செயலிகளுக்கு தீம் ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஓ.எஸ்ஸில் இதற்கு முன் இருந்ததை விட சிறந்த தீம்கள், செயலிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில் மேம்பாடு, சிறந்த தனியுரிமை அம்சங்கள், மொழி கட்டுப்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.