அமெரிக்காவின் சட்டமா மன்ற மேலவை உறுப்பினரான கமலா ஹாரிஸின், நீண்டகால செனட் உதவியாளராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Rohini Kosoglu என்ற,பெண்ணுக்கே இந்த நியமனம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக சட்டமா மன்ற மேலவையில் சட்டம் மற்றும் அரசியல் கொள்கை நிபுணராக Rohini Kosoglu கடமையாற்றியுள்ளார்.
அவர் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றுள்ளார்.
அண்மையில்,சட்டமா மன்ற மேலவை உறுப்பினர் மைக்கேல் பென்னட்டின் கொள்கை இயக்குனர் மற்றும் மூத்த ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
”ரோகினி போன்ற வலுவான அறிவுடைய ஒருவர், எங்களது அணியில் இணைவதற்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என” அமெரிக்காவின் சட்டமா மன்ற மேலவை உறுப்பினரான கமலா ஹாரிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேசத்தின் இலட்சியங்களுக்காக போராட ரோகினியுடன் நெருக்கமாக வேலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நான் எதிர்ப்பார்க்கின்றேன் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.