கொவிட் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 23ஆம் திகதி நாட்டில் செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தங்களை அடையாளம் காணும் வகையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட நாடாளுமன்ற குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் இருந்து இரண்டு சின்னங்களை நீக்கி தேர்தல் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.