ஆசிரியையான 29 வயது யுவதி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மத்துகம ஓவிட்டிகல மகா வித்தியாலயத்தின் ஆசிரியையான லக்மாலி உதேஷிகா (29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (15) மாலை மத்துகமவிலிருந்து அளுத்கம நோக்கி ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்கு உள்ளானத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெலிபன்ன சந்தியில் இருந்து திடீரென பிரதான விதிக்கு பிரவேசித்த கப் வாகனத்தில் மோதுண்டுள்ள நிலையில் பிரதான வீதிக்கு தூக்கி எறியப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் எதிர்த்திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் யுவதி மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து கப் வாகன சாரதி தப்பியோடி விட்டார். பின்னர், வெலிபன்ன பொலிஸாரினால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் மதுகம பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.