ஆவடியில் குழந்தை இல்லாத வருத்தத்தில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆவடி அடுத்த தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் கட்டடத்தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா (23). இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லாததால் இருவரும் மன வருத்ததில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந் வியாழன் (03) காலை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய மணிகண்டன் தனது மனைவி காஞ்சனாவை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து காஞ்சனா தனது அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து, சமையல் அறையில் தூக்கிட்டு கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இல்லாததால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.