ரொறொன்ரோ பகுதி பெண் ஒருவர் தனது ஆறுவயது பெண் சிறுமிக்கு பொலிசார் கைவிலங்கிட்டதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.
மிசிசாகாவில உள்ள நகனி வே பொது பாடசாலைக்கு பொலிசார் அழைக்கப்பட்டதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட பெண் வன்முறையாக நடந்து கொள்வதாகவும் தங்களால் அவளை அமைதிப்படுத்த முடியவில்லை எனவும் பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த செப்ரம்பர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. இவள் தனக்கும் அதே போல் மற்றய மாணவர்கள் மற்றும் ஊழியர்களிற்கும் ஆபத்தாக இருந்ததால் கைவிலங்கு மாட்ட வேண்டியத அவசியமாக இருந்ததென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைவிலங்கை பயன்படுத்த முன்னர் பொலிசாரும் பாடசாலை சபையும் அவளை அமைதிப் படுத்த பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பலனளிக்காத காரணத்தால் கைவிலங்கை நாடவேண்டிய நிலை ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களது வக்கீலும் அவள் மீது பயன் படுத்தப்பட்ட சக்தி அதிகமானதென கூறுகின்றனர். அவள் உதைத்தல், கிரீச்சிடுதல், துப்புதல் மற்றும் குத்துதல் போன்ற செயல்களை செய்ததாக குடும்பத்தினரின் வக்கீல் தெரிவித்தார்.
கைவிலங்கு உபயோகம் அவசியம் என்பது சந்தேகம் என வக்கீல் கருதுகின்றார். பெண் 48இறாத்தல்கள் எடை கொண்டவள். பொலிசார் தகவலை தாயாருக்கு அறிவித்ததும் அவர் சீற்றம் கொண்டதாக கூறப்படுகின்றது.
இப்பெண் விடயமாக செப்டம்பர் சம்பவம் பாடசாலை பொலிசாரை அழைக்கும் மூன்றாவது தடவை என தெரிவிக்கப் பட்டுள்ளது. உதைத்தல், குத்துதல் போன்ற வன்முறை நடவடிக்களினால் மற்றவர்களின் பாதுகாப்பு கருதி இவளை தடுக்க அவளை நிதானப்படுத்த வேண்டியது அவசியம் என பொலிசார் தெரிவித்தனர்.
ஆபிரிக்க கனடிய சட்ட கிளினிக் பாடசாலை மற்றும் பொலிசாருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை-மனித உரிமைகள் புகார் உட்பட்ட-பதிவு செய்கின்றனர். ஆனால் பொலிசார் தங்கள் நடவடிக்கைகளின் பிரகாரம் நிற்கின்றனர்.
இச்சம்பவம் இன வாத நோக்கம் கொண்டதல்ல எனவும் தெரிவித்த பொலிசாரார் நிலைமையை தாங்கள் கையாண்ட விதத்தில் இனம் விளையாடியதென கூறுவது ஒரு அவமானம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைவிலங்கிட முன்னர் கையாளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத காரணத்தால் இறுதி முயற்சியாக விலங்கிட நேர்ந்ததென பாடசாலை சபையும் பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.