Loading...
நாளை காலை உலகமெங்கும் போகன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் சம்பந்தமாக பல விஷயங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். இப்படத்தின் இடைவெளி காட்சியை நமக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டினர். அந்த காட்சிகளை பார்த்த சில நிமிடங்களிலேயே இந்த படம் கண்டிப்பாக இந்த வருடத்தின் மெகா ஹிட் லிஸ்டில் இணையும் என்பதை திட்டவட்டமாக கூற முடிகிறது.
இவ்விழாவில் பேசிய இயக்குனர்… போகன் படத்தை நான் என்னுடைய 4வது படமாக எடுக்கலாம்னு தான் திட்டம் வைத்திருந்தேன். ஆனால் பிரபுதேவா சாரிடம் இந்த கதையை கூறியதும் அவர் போகன் படத்தை முதலில் ஆரம்பிச்சிடலாம்னு சொல்லி எனக்கு உறுதுணையாக இருந்தார். அதுமட்டுமல்ல என்னுடைய ஹிரோ ஜெயம் ரவிதான் அரவிந்த்சாமி சார் இந்த படத்துல நடிச்சா நல்லாயிருக்கும்னு ஐடியா கொடுத்தாரு. இப்ப படத்தோட ரிசல்ட் பார்க்கும்போது அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு புரிகிறது.
ஏற்கனவே போகன் படம் திருட்டு கதையின்னு சொல்லிட்டு இருக்காங்க, இந்த படம் எந்த ஆங்கில தழுவலையும் வைத்து எடுக்கப்பட்டது அல்ல இது முழுக்க முழுக்க லக்ஷ்மன் படம்தான் என்று கூறினார் இயக்குனர்.
Loading...