சசிகலா குடும்பத்தினர் பொலிசார் உதவியுடன் எனக்கு அச்சுறுத்தல் கொடுக்கின்றனர் என ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
காவல் துறையினர் நான் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
காவல் துறையினர் மூலம் என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர். நான், அவர்களிடம் பேரம் பேசுவதாகவும், பணம் வாங்கி விட்டதாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், என்னை காவல் துறையினர் மிரட்டுவதற்கும் தொடர்புகிடையாது.
நான், அதிமுக வுடன் நெருக்கம் காட்ட வில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க, அவர்கள் முயற்சி செய்கின்றனர்.சசிகலாவுடன். மாவட்ட தலைநகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதற்கான விபரத்தை 2 நாட்களில் அறிவிக்கிறேன்.
அரசியலுக்கு வருவதில் எந்த குழப்பமும் இல்லை என்றும் பிப்ரவரி 24 ஆம் திகதி நல்ல முடிவை எடுப்பேன் என கூறியுள்ளார்.