யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட போதிலும், கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்க கோரியும், காணாமல் போன 20 ஆயிரம் பேருக்கு அரசே பதில் சொல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய், புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை, இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தீர்வினை காண், என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு பட்டி அணிந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மறுபக்கம் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தை நகர விடாமல் பொலிஸார் மறியல்களை அமைத்து தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.