மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிப்பை தவிர்த்து விஜய்க்கு நடனம், பாடல் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் இருப்பதால் அவரது படங்களிலேயே அவ்வப்போது பாடல்களையும் பாடி வருகிறார். முன்னணி இசையமைப்பாளர்களில் ஏ.ஆர். ரகுமான் இசையில் மட்டும் இன்னும் பாடாத நிலையில், `விஜய் 61′ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பாடும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இசைப்பாளர்களின் இசையில் பாடிய ஒரே நடிகர் என்ற பெருமை விஜய்யை சேரும். விஜய் முன்னதாக இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், டி.இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயண் உள்ளிட்டவர்களுன் இசையில் பாடியுள்ளதால் `விஜய் 61′ குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.