போகன் படம் முழுதும் தமிழர் கலாசார சீரழிவு காட்சிகள் என்று சொல்லப்படுகிறது.
ஓபன் பண்ணா, ஹீரோயின் இன்ட்ரோ. அவர் கும்பலோட கும்பலா
டாஸ்மாக்கில் நின்னு, எது குப்புன்னு ஏறும்ன்னு பாட்டில் வாங்குகிறார். ஆனா, பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரின்னு இன்ட்ரோ டயலாக். ஒரே கப் அடிக்கும்போது, பப்பாயி கீரை சாப்பிடுகிற சீன்.
தமிழக பெண்களை 95 சதவிகிதம் குடிப்பதில்லை. ஆனால், இது போல் குடித்தால் தவறில்லை என்ற கலாசார சீரழிவினை புகுத்தும் போகன் படத்தை என்ன சொல்லுவது?
தமிழ் நிச்சயதார்த்தங்களில் யாரும் பாரின் போல மோதிரம் மாற்றி நிச்சயம் மாற்றிக்கொள்ளுவதில்லை. இங்கு திருமணம் இரு தனிப்பட்டவர்களுக்கு இடையே நடப்பதில்லை. இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் பந்தம்.தமிழரின் குடும்ப கலாசாரத்திலும் போகன் ஆப்பு வைத்து இருக்கிறது.
அரவிந்த் சாமியின் கேரக்டர் முழுதும் பெண்களை கொச்சைப்படுத்துகிறது. தமிழ் கலாசாரத்தில் பெண்கள் இதுவரை கண்ணகி , வேலுநாச்சி என்று சொல்லப்பட்டது போக, பெண் ஒரு போக பொருள் என்றே பொருள் கொள்ளும்படி போகன் என்று பெயர் வைத்து வருங்கால தலைமுறைக்கு பெண்கள் பத்தி நல்ல பாடம் எடுத்து இருக்கிறார்கள்.