அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். அந்தநேரத்தில் எனது கைவசம் பல படங்கள் இருந்ததால் எமன் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, விஜய் ஆண்டனி அந்த கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி தற்போதும் ஒரு சிறப்பான கதையையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதையை தேர்ந்தெடுத்த அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.