ஜெயலலிதா இந்திய அரசியலில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர், மிகுந்த ஆளுமை திறன் கொண்டவர். அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களுக்கு உத்வேகமாக அமைந்தவர். தமிழ்நாடு அவரது தலைமையின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் பெற்றது. அவர் ஒரு மறக்க முடியாத வலிமையான சக்தி கொண்டவர். எல்லா பிரச்சினைகளையும் விடா முயற்சியுடன் உறுதியாக இருந்து தீர்த்து வைத்தவர். அவர் எல்லா மக்களுக்கும் ஊக்க சக்தியாக திகழ்ந்தவர்.
அவருடைய மறைவு எல்லோருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்றது தொடர்பாக பல மர்மங்கள், பதில் அளிக்க முடியாத கேள்விகள் இருக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரை கவனித்து கொள்ளும் உரிமை, அவரது உடல்நலம் பற்றிய விவரங்கள் போன்றவற்றுக்கு யார் பொறுப்பு என்று முடிவு எடுத்தது யார்? இது சம்பந்தமாக மக்களுக்கு யார் பதில் சொல்வது? இதுபோன்ற கேள்விகள் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களுடைய கேள்விகளை உங்களுடைய கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.
இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது உரிமையை கேட்டு போராட உரிமை உள்ளது. அதேபோல் இந்த ரகசியங்களையும் அறிய அவனுக்கு உரிமை இருக்கிறது.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை தாங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். சமூக வலைதளங்களின் மூலமும் மக்களை அவ்வப்போது சந்தித்து வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு, சமூக வலைதளம் மூலமாகவும், நேரிலும் கடிதத்தை அளித்தும் உண்மை நிலவரம் தெரியவில்லை. எனினும் பிரதமர் மீது முழு நம்பிக்கையுடன் இருப்பதாக கவுதமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் இயல்புநிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட காரணத்தால் தமிழகத்தில் தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பிரதமர் மோடி தலையிட்டு தமிழக மக்களின் இன்னல்களை தீர்த்துவைக்க வேண்டும் என்றும் கவுதமி கோரிக்கை வைத்துள்ளார்.