மொச்சையில் கூட்டு, காரக்குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மொச்சையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
தேவையான பொருட்கள் :
உலர் மொச்சை – 100 கிராம்,
சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு – 100 கிராம்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
தேங்காய்த் துருவல் – சிறிய கப்,
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
தனியா – ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.
தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.
இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து குழம்பில் சேர்த்து இறக்கவும்.
சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.